விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புஷ்பயாகம்
ADDED :2331 days ago
விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் புஷ்பயாகம் நடந்தது.
விழுப்புரம் ஜனகவல்லி நாயிகா சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து கருடப்பிரதிஷ்டை, கருட சேவை, திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.கடந்த 18ம் தேதி தேர் திருவிழா மற்றும் திருமஞ்சனம், தீர்த்தவாரி, அவரோஹணம், சாற்றுமுறை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து புஷ்பயாகமும்; விடையாற்றி உற்சவமும் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.