பழநியில் திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் விழா
ADDED :2528 days ago
பழநி: பெரிய நாயகியம்மன் கோயிலில், திருஞானசம்பந்தருக்கு பொற்கிண்ணத்தில் பாலூட்டும் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ரிஷபவாகனத்தில் சிவன், பார்வதியும், திருஞானசம்பந்தர் உற்ஸவ மூர்த்திகள் கோயிலை வலம் வந்தனர். அதன்பின் சிவன், பார்வதி, திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை
நடந்தது. அம்பாளிடமிருந்து பொற்கிண்ணத்தில் ஞானப்பால் பெறப்பட்டு, திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. சித்தனாதன் அன் சன்ஸ் சிவனேசன், பழனிவேல், கார்த்திகேயன், குமரகுருபரன், செந்தில்குமார் சதீஸ்குமார், விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.