நாயன்மார்களுக்கு குருபூஜை வழிபாடு
ADDED :2377 days ago
திருப்பூர் :திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, 63 நாயன்மார்களுக்கு, அவர்களது நட்சத்திர நாளில், குருபூஜை நடக்கிறது. அர்த்தசாம பூஜை அடியார் திருக்கூட்டத்தினர், தமிழ்மாதத்தின் முதல் திங்கள்கிழமை, திருவாசகம் முற்றோதல் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
நாயன்மார் நட்சத்திர நாட்களில், குருபூஜை விழாவையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். வைகாசி மூல நட்சத்திர தினமான நேற்று, நான்கு நாயன்மார்களுக்கு குருபூஜை நடந்தது.திருஞானசம்பந்தர், முருகநாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்டத்து யாழ்ப்பாணர் ஆகிய நான்கு நாயன்மார்களுக்கு, சிறப்பு அபிேஷகமும், அலங்கார பூஜையும் நடந்தது.சிவனடியார்கள், பன்னிருதிருமுறைகளை ஓதியும், திருவாசகம், தேவார பாடல்களை பாடியும் வழிபட்டனர். தொடர்ந்து, சிவனடியார்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.