மாகாளியம்மன் கோவிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி
உடுமலை:உடுமலை, சீனிவாசா வீதி, உச்சிமாகாளியம்மன் கோவிலில், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை, சீனிவாசா வீதி உச்சிமாகாளியம்மன் கோவிலில், கடந்த 7ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது. நேற்று மாலை, 7:00 மணிக்கு விநாயகர் கோவிலிலிருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
அம்பாளுக்கு, சிறப்பு அபிஷேகத்துடன் சந்தனக்காப்பு சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சக்தி அழைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்பாளை வழிபட்டனர். இன்று, காலை, 8:00 மணிக்கு சுற்றுப்பகுதி பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபடுகின்றனர். மாலையில், கலைநிகழ்ச்சிகள், இரவில், நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. நாளை, சிறப்பு அலங்காரத்துடன் உச்சிமாகாளியம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 24ம்தேதி மாலை, 5:00 மணிக்கு மகாபிஷேகம் நடக்கிறது; 25ம்தேதி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.