உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மகாலட்சுமி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

அன்னூர் மகாலட்சுமி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

அன்னூர் :புள்ளாமடை கோவில் திருவிழாவில் இன்று (மே., 22ல்) கரகம் எடுத்தல் நடக்கிறது. வடக்கலூர் ஊராட்சி, புள்ளாமடையில், மகாலட்சுமி அம்மன் கோவிலில், பூச்சாட்டு திருவிழா கடந்த வாரம் துவங்கியது. தினமும் மாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது.நேற்று மாலை சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை, அபிஷேக பூஜையும், இரவு கரகம் எடுத்தலும் நடக்கிறது. 22ம் தேதி காலை பக்தர்கள் கோவிலுக்கு மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தபடி ஊர்வலமாக வருகின்றனர்.மதியம் அலங்கார பஜை, அபிஷேக பூஜை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. 23ம் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !