புதுச்சேரி மார்க்கண்டேயர் திருமடம் சித்தர் ஜீவசமாதி தரிசன நிகழ்ச்சி
ADDED :2337 days ago
புதுச்சேரி:மார்க்கண்டேயர் திருமடம் சார்பில், இரண்டாமாண்டு சித்தர் ஜீவ சமாதி நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
மார்க்கேண்டயர் திருமடம் சார்பில், ஆதினம் சந்திரசேகர் சுவாமிகள், புதுச்சேரியில் வாழ்ந்து சித்தி அடைந்த 19 சித்தர்களின் ஜீவசமாதிக்கு, இரண்டாம் ஆண்டாக ஒரு நாள் என்ற நிகழ்வு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், 54 இருசக்கர வாகனங்களில், இருவர் அமர்ந்து கொண்டு, 19 சித்தர்களின் படத்துடன், ஒவ்வொரு சித்தர் ஆலயத்திற்கும் செல்கின்றனர். அங்கு அகன்ற தீபம் ஏற்றி, சங்கு ஒலி, எக்கா ஒலி எழுப்பி சித்தர்களின் திருநாமம் ஒன்று சேர, 108 முறை ஓதுகின்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், நாளை 25ம் தேதி காலை 5.30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மூன்று வேளை உணவு, தேனீர் வழங்கப்படும்.