கம்மாபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்
ADDED :2332 days ago
கம்மாபுரம் : கம்மாபுரம் அடுத்த ஊ.கொளப்பாக்கம் காலனி முத்துமாரியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.விழாவை முன்னிட்டு,
கடந்த 15ம் தேதி காப்பு நிகழ்ச்சி நடந்தது. தினசரி, காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள் பாலித்தார். அரிச்சந்திரா கதை பாட்டு நிகழ்ச்சி நடந்தது.நேற்று (மே., 24ல்)காலை 11:00 மணியளவில், ஏராளமானோர் பால்குடம் சுமந்தும், செடல் அணிந்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து, சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.