நடுவீரப்பட்டில் வெயிலில் வீணாகும் தேர் பாதுகாக்க பக்தர்கள் கோரிக்கை
ADDED :2332 days ago
நடுவீரப்பட்டு : திருமாணிக்குழி அம்புசாட்ஷி சமேத வாமணபுரீஸ்வரர் கோவிலின் தேர் வெயிலில் நின்று வீணாகி வருகிறது.கடலூர் அடுத்த திருமாணிக்குழியில் புகழ்பெற்ற
அம்புசாட்ஷி சமேத வாமணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத் துறைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலமாகும்.இந்த கோவிலுக்கு கடந்த
ஆண்டு புதியதாக தேர் செய்யப்பட்டது. தேரை நிறுத்த ஷெட் இல்லாததால், கோவில் எதிரில், சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் தேர் வெயில் மற்றும் மழையில் நிற்பதால் வீணாகி வருகிறது.ஆகையால் இந்த தேருக்கு ஷெட் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.