உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் வசந்த உற்ஸவம்

நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் வசந்த உற்ஸவம்

காரைக்கால்:காரைக்கால் நித்யகல்யாணப்பெருமாள் கோவிலில் நேற்று வசந்த உற்சவம் மற்றும் கோடை திருமஞ்சன பெருவிழா நடந்தது.


அதனையொட்டி நேற்று காலை 9:30 மணிக்கு விசேஷ தீபாராதனை சாற்றுமறை கோஷ்டிப்பிரசாதம் நடந்தது. பின் மூலவர் ரங்கநாதர் மற்றும் உற்சவ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், உச்சிகால திருவாராதனம், தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெருமாள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மூலஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை 8.30 மணிக்கு கோடைத் திருமஞ்சனப் பெருவிழாவையொட்டி சுற்றுக்கோவில் மூர்த்திகளுக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்ய கல்யாணப்பெருமாள் பக்த ஜனசபாவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !