உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிதோஷம் இனி இல்லை!

சனிதோஷம் இனி இல்லை!

ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்காணும் வழிபாடுகளை மேற்கொண்டால் சனிதோஷம் பெருமளவில் குறையும்.  சனிக்கிழமையன்று நவக்கிரக சன்னதியில் எள், எண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள். உடல் குறைபாடு உள்ளவர்கள் அல்லது விதவைகளுக்கு  உதவுங்கள். காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கலாம். இரும்பு அகலில் நல்லெண்ணைய் தீபம் ஏற்றி, கருங்குவளை மலரால் சனீஸ்வரரை அர்ச்சனை செய்யலாம். வன்னிமர இலைகளை மாலையாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமையன்று சாற்றலாம். சனி பிரதோஷத்தன்று விரதமிருந்து நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது நல்லது. சனியன்று விநாயகர், அனுமாரை வழிபட்டால் பிரச்னை தீரும். ஞாயிறன்று ராகுகாலமான மாலை 4:30 – 6:00 மணிக்குள் அல்லது தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை தரிசிக்கலாம். ராம நாமம் ஜபிப்பது அல்லது ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை  தினமும் 108 முறை எழுதுவது நல்லது. சித்தர் பீடங்கள், ஜீவசமாதிகளை தரிசிக்கலாம். முதியோர், ஆதரவற்றோர் அன்னதானத்திற்கு முடிந்த உதவிகளைச் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !