பிரசாதம் இது பிரமாதம்: பந்தர் லட்டு
ADDED :2371 days ago
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - – 200 கிராம்
அரிசி மாவு - – ஒரு டீஸ்பூன்
நெய் - – 100 கிராம்
பொடித்த சர்க்கரை -– 150 கிராம்
எண்ணெய் - – பொரிக்கத் தேவையானஅளவு
ஏலக்காய்த்தூள் -– சிறிதளவு
வறுத்த முந்திரி -– சிறிதளவு
உப்பு -– ஒரு சிட்டிகை
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் வைத்து சூடான எண்ணெய்யில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வரும் போது, எடுத்து ஆற வைக்கவும். அதன்பின் மிக்சியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும். ஆந்திராவிலுள்ள பந்தர் என்னும் ஊர் இந்த லட்டுக்கு புகழ் மிக்கது.