இல்லாத திசையே இல்லை
ADDED :2370 days ago
’சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாள் இல்லை’ என்று பாடியவர் அவ்வையார். அவர் ஒருநாள் கைலாயத்தில் தரிசனத்தை முடித்து விட்டு சிவனுக்கு எதிரிலேயே கால்களை நீட்டி அமர்ந்தார். இதைக் கண்ட பார்வதிக்கு கோபம் உண்டானது. ”அவ்வையே! சுவாமியை நோக்கி காலை நீட்டியிருக்கிறாயே?” எனக் கேட்டாள்.
”உலகாளும் உமையவளே! சுவாமி இல்லாத திசையைக் காட்டு; அந்த பக்கமாக நீட்டுகிறேன்” என பதிலளித்தார். நாலாபுறமும் கண்களை சுழற்றினாள் பார்வதி. எங்கும் சிவனே காட்சியளித்தார். எல்லாம் சிவமயம் என்னும் உண்மையை உணர்ந்தாள்.