ப.வேலூர் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED :2325 days ago
ப.வேலூர்: பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்து வருகிறது. ப.வேலூர், பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 12ல் தொடங்கியது.
தினசரி மாலை, முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மே., 27ல்) மாலை, திருத்தேர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. இன்று (மே., 28ல்) மாலை, 4:00 மணிக்கு பக்தர்கள் தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (மே., 29ல), பொங்கல் மாவிளக்கு பூஜை, வண்டி வேட நிகழ்ச்சி, 30ல் கிடா வெட்டுதல், 31ல் மஞ்சள் நீராடல் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.