சந்தனக் கட்டைகளே மூலவர்
ADDED :2369 days ago
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில், கருங்குளம் கிராமத்தில் வகுளகிரி என்ற சிறு குன்றின் மீது உள்ளது வேங்கடாசலபதி பெருமாள் கோயில். இக்கோயில் கருவறையில் உள்ள இரண்டு சந்தனக் கட்டைகளே மூலவராக வணங்கப்படுகின்றன. இவை மருந்து கலவைகளான பீடத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இரு கரங்கள் மற்றும் திருநாமப்பட்டையும் அணிவிக்கப்பட்டுள்ளன.