சொர்க்கத்தில் வீடு வாங்குவோம்
மனிதர்களுக்கு பூமியில் பல வீடுகள் இருக்கலாம். அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானமும் கிடைக்கலாம். இதனால் நாம் அனுபவிப்பதாக நினைக்கும் இன்பம் தற்காலிகமானதே. இதனால் துளியும் பயன் கிடையாது.
உண்மையான இன்பம், விண்ணக வீட்டில்தான் இருக்கிறது. நாம் குடியிருக்கப் போகும் விண்ணகவீடு இதோ... விரைவில் நமக்கு கிடைக்கப் போகிறது. இயேசு சொன்னார், “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்,” என்று! ஆம்.. அது முற்றிலும் உண்மை. அவர் முன்னதாகவே பரிசுத்தமான பிதாவிடம் சென்று நமக்காக ஒரு உலகைப் படைத்திருக்கிறார். நமக்கு ஒரு விண்ணக வீட்டைத் தர காத்திருக்கிறார். இந்த வீட்டில் நாம் தங்க வேண்டுமானால், ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் நடந்த அன்புப் பாதையை தேர்ந்தெடுத்து அதிலிருந்து சிறிதும் பிறழாமல் நடக்கவேண்டும். ஒழுக்கத்தையும், உண்மையையும் கடைப்பிடித்து பிறருக்கு துன்பம் செய்யாத வாழ்க்கை வாழ வேண்டும்.