உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்டத்தை பூலோகத்துக்கு கொண்டு வரலாமா?

வைகுண்டத்தை பூலோகத்துக்கு கொண்டு வரலாமா?

நாம் பிறவியையெல்லாம் முடித்து முக்தியடைந்ததும் வைகுண்டம் போய் சேருவோம். அங்கே நம்மை ‘நித்திய சூரிகள்’ என்று பெயரிட்டு அழைப்பர். பெருமாள் எப்போதும் நமக்கு காட்சிதருவார். அவரது திருவுருவைப் பார்த்தபாடி ஆடிப்பாடி தரிசிப்போம். பசி, துக்கம், ஆசை, உறக்கம் போன்ற எந்த உணர்ச்சியும் இருக்காது. 


வைகுண்டத்தில் இருப்பது போன்ற இந்த உணர்வை பூலோகத்திலும் நம்மால் பெற முடியுமா என்றால் ‘முடியும்’ என்கிறார் நாதமுனிகள் என்னும் வைணவப் பெருந்தகை. இவர் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைத் தொகுத்தவர். இந்த பாடல்களை இசையோடு நாட்டியமாடுவது போல் அபிநயித்து பாடினார். இவ்வாறு ஆடுவதற்கு ‘அரையர் சேவை’ என்று பெயர். அவருக்குப் பின் வந்த ஆளவந்தார், ராமானுஜர் போன்றவர்களும் அரையர் சேவையை முக்கிய வழிபாடாக பின்பற்றி வைகுண்டத்தை பூலோகத்துக்கு கொண்டு வந்தனர். ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநாராயண புரம் ஆகிய கோயில்களில் பாசுரங்களை அபிநயத்துடன் ஆடிப்பாடும் அரையர்சேவை வழிபாடு உள்ளது. இப்படி ஆடிப்பாடும் முறை சிவன் கோயில்களிலும் இருந்தது.  ஓதுவார்கள், திருவாசகத்தில்உள்ள ‘குயில்பத்து’ பாடல்களை அபிநயத்துடன் ஆடிப்பாடும் வழக்கம் திருவெண்ணெய் நல்லூர் கோயிலில் இருந்ததாக கல்வெட்டு தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !