ஸ்ரீரங்கம் கோயிலிலும் அலைபேசி தடை
ADDED :2357 days ago
திருச்சி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் அலைபேசி எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை பின்பற்றி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலும் தடை விதிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதற்காக இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. பக்தர்களிடம் கருத்து கேட்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆணையரின் அனுமதி கிடைத்த பின் ரெங்கா ரெங்கா கோபுரம், வடக்கு கோபுரம் மற்றும் வெள்ளை கோபுர நுழைவு வாயில்களில் அலைபேசி பாதுகாப்பகம் அமைக்கப்பட உள்ளது என அறநிலையத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.