உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழா

சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழா

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலை குன்று வளர்ந்த ஸ்ரீ பிடாரி அம்மன் கோயில் 53 ம் ஆண்டு பால்குடம் மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.ஐந்து கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, பிரான்மலை, தேனம்மாள் பட்டி, மேலப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த ஒரு சமூகத்தினர் அடுத்தடுத்த வெள்ளிக் கிழமைகளில் காப்புகட்டி பால்குடம், பொங்கல் வைப்பது வழக்கம்.

இம்முறை நேற்று கிருங்காக்கோட்டையை சேர்ந்தவர்கள் காப்புகட்டி பால்குடம் எடுத்து பொங்கல் வைத்தனர். பொங்கல் சாமிக்கு படைக்கப்பட்டு பிறகு அனைவருக்கும் சமபந்தியாக பரிமாறப்படுகிறது. பாரம்பரியமாக மண் பானையில் பொங்கல் வைத்தவர்கள் காலப்போக்கில் அனைத்து பானைக்கும் மாறியதாக கூறினர். இவர்கள் பொங்கல் கூடையுடன் நடந்தே வந்து பூஜைகள் முடித்து நடந்தே செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது மழை வரும் என்பது இவர்களின் ஐதீகமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !