உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பிளியம்பட்டியில் கழுமர ஏற்றம்

கம்பிளியம்பட்டியில் கழுமர ஏற்றம்

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி மற்றும் காட்டுப்பட்டியில் முத்தாலம்மன், பகவதியம்மன், சக்தி காளியம்மன், மாரியம்மன் கோயில்களின் உற்ஸவ விழா நடந்தது.

கடந்த மே 28 ல் கரகம் ஜோடிக்க புறப்பாடு நடந்தது. மறுநாள் அதிகாலை வாண வேடிக்கையுடன் சுவாமிகள் கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டு மற்றும் பாரி வேட்டை நடந்தது. இரவு பட்டிமன்றம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கருப்பண சுவாமி ஆட்டம் மற்றும் முஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார். இரவு முத்தாலம்மன் கரகம் ஜோடிக்கப்பட்டது. நேற்று காலை மேளதாளம் முழங்க அம்மன் கோயிலை வந்தடைந்தார். இதையடுத்து மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் மற்றும் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக படுகளம் மற்றும் கழுமர ஏற்றம் நடந்தது. இன்று அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !