உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எறையூர் தூய ஜெபமாலை அன்னை ஆலய தேரோட்டம்

எறையூர் தூய ஜெபமாலை அன்னை ஆலய தேரோட்டம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூர் தூய ஜெபமாலை அன்னை ஆலய 149ம் ஆண்டு பெருவிழா தேரோட்டம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி ஆலய வளாகத்தில் பங்கு தந்தை அல்போன்ஸ் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 25ம் தேதி வரை மாலை 6:00 மணியளவில் நவநாள் தேர்பவனியும், திருப்பலியும்
நடந்தது.

26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நற்கருணை திருவிருந்து, நவநாள் தேர்பவனி, உறுதிப்பூசுதல் திருப்பலி, குணமளிக்கும் வழிபாடும் நடந்தது.நேற்று முன்தினம் (மே., 30ல்) காலை 7:30 மணியளவில் கூட்டுத் திருப்பலியும், ஆடம்பர தேர் பவனியும், இரவு 11:00 மணியளவில் அன்னையின் பெருவிழா திருப்பலியும், ஆடம்பர தேரோட்டமும் நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.தேரோட்டத்தை யொட்டி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் ஏ.டி.எஸ்.பி. முகிலன், டி.எஸ்.பி.க்கள் பாலச்சந்தர், சரவணன், ரவிச்சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று (மே., 31ல்) கொடியிறக்கமும், கூட்டுத் திருப்பலியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !