உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜாக்கள் பயன்படுத்திய வரலாற்று சிறப்பு மிக்க பழங்கால நாணயங்கள்

ராஜாக்கள் பயன்படுத்திய வரலாற்று சிறப்பு மிக்க பழங்கால நாணயங்கள்

வரலாற்று சிறப்பு மிக்க பழங்கால நாணயங்கள், தபால்தலைகளை காண ஆர்வம் உள்ளவர்கள், ஆர்.எஸ்.புரம்., குஜராத் சமாஜம் அரங்குக்கு, ஒரு விசிட் அடிக்கலாம்.
கோயமுத்தூர் நாணயவியல் சங்கம் ஆரம்பித்து, 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அரிய நாணயங்களை மக்களிடையே, அறிமுகப்படுத்தும் விதமாக
இக்கண்காட்சிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாக்பூர், மும்பை, ஐதராபாத், கோல்கட்டா, கொச்சின், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, வந்துள்ள சேகரிப்பாளர்கள், தங்கள் அரிய சேகரிப்புகளை காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளனர்.துவக்க விழாவான நேற்று 31ல், 1862ம் ஆண்டு வெளியான வெள்ளி ஒரு ரூபாய் நாணயம் ஒன்றின் சிறப்புகள் குறித்த புத்தகத்தை, மைசூர் நாணயவியல் சங்க தலைவர் துவாரகநாத் வெளியிட்டார்.

கோயமுத்தூர் நாணவியல் சங்க தலைவர் ரவிச்சந்திரன், வரலாற்று சான்றுகள் அழியாமல் பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பழங்கால நாணயங்கள் உதவுகின்றன. இங்கு, மன்னர் கால நாணயங்கள், உலோக நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள் உள்ளிட்ட பல அரிய பொக்கிஷங்கள், காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ளன, என்றார்.நாளை நிறைவு பெறும் கண்காட்சியை, மிஸ் பண்ணீடாதீங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !