உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுமன்னார்கோவில் நம்பியாண்டார் குரு பூஜை விழா

காட்டுமன்னார்கோவில் நம்பியாண்டார் குரு பூஜை விழா

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள திருநாரை யூரில் நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை விழாவை முன்னிட்டு, பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த திருநாரையூரில் அமைந்துள்ளது பொல்லா பிள்ளையார் கோவில். இக்கோவிலில் வரும் 6ம் தேதி நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை விழா நடைபெற உள்ளது. திரிபுரசுந்தரி அம்பிகா சமேத சவுந்தரேஸ்வரர் கோவில், வைகாசி விசாக பிரமோத்சவம் நடக்க உள்ளது.விழாவை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜையுடன் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

அதில் கோவில் அர்ச்சகர் பொறியாளர் கார்த்திகேயன், வெங்கடேச தீட்சிதர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !