கம்மாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
ADDED :2359 days ago
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த கார்கூடல் திரவுபதியம்மன் கோவிலில், ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.விழாவை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி காப்பு
கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி, காலை, மாலை திரவுபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக
கடந்த 27 ம் தேதி காலை 7:00 மணியளவில் அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:00 மணியளவில் ஏராளமானோர் தீமித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.தொடர்ந்து, அன்னதானம்
வழங்கப்பட்டது.