திருவொற்றியூர் தியாகராஜர்சுவாமி கோயில் வசந்த உற்ஸவவிழா
ADDED :2362 days ago
திருவொற்றியூர்:தியாகராஜ சுவாமி கோவிலில், வசந்த உற்சவ விழா, நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில், 19 ம்தேதி, காப்புக் கட்டுதலுடன், வசந்த உற்சவ பெருவிழா துவங்கியது.வசந்த உற்சவத்தின், கடைசி நாளான, நேற்று முன்தினம் (ஜூன்., 2ல்) இரவு, தியாகராஜர் சிறப்பு மலர் அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருளினார்.பின், சங்கு, நாதஸ்வரம் போன்ற வாத்திய கருவிகள் இசைக்க, உற்சவர் புறப்பாடு நடந்தது. வசந்த தீர்த்த குளத்தை சுற்றி, திருநடனம் புரிந்தார்.பின், வடிவுடையம்மன் உற்சவ தாயார், தெற்கில் எழுந்தருள, தியாகராஜர், எதிர்சேவை புரிந்து,திருநடனமாடினார்.
பக்தர்கள், தியாகராயா ஒற்றீஸ்வரா என, பக்தி பரவசத்துடன் முழங்கினர். பின், மாட வீதி புறப்பாடாகி, சன்னிதி வந்தடைந்தார். இந்நிகழ்வுடன், வசந்த உற்சவம் நிறைவு பெற்றது.