இந்த வாரம் என்ன?
* ஜூன் 1, வைகாசி 18: மாத சிவராத்திரி, கழற்சிங்க நாயனார் குருபூஜை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், திருப்போரூர் முருகன் அபிஷேகம், அகோபிலமடம் 39வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.
* ஜூன் 2, வைகாசி 19: போதாயன அமாவசை, கார்த்திகை விரதம், திருநெல்வேலி கைலாசபுரம் கைலாசநாதர், புட்டாபுரத்தி அம்மன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு, ரத்தினகிரி பாலமுருகன் தங்கத்தேர்.
* ஜூன் 3, வைகாசி 20: அமாவாசை விரதம், அமாசோம பிரதட்சிணம், திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம், சிவகாசி விஸ்வநாதர் உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபாலர் புறப்பாடு, திருக்கண்ணபுரம் சவுரிராஜர் விபீஷணருக்கு நடையழகு சேவையருளல், ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.
* ஜூன் 4, வைகாசி 21: சந்திர தரிசனம், வாஸ்து நாள், காலை 9:58 – 10:34 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறுக்கு வாஸ்து பூஜை செய்தல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், சிவகாசி விஸ்வநாதர் பூதவாகனம், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் சிம்ம வாகனம்.
* ஜூன் 5, வைகாசி 22: ரம்பா திரிதியை, மாதவி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, சோழவந்தான் ஜனகை மாரியம்மன் யாளி வாகனம்.
* ஜூன் 6, வைகாசி 23: முகூர்த்த நாள், சதுர்த்தி விரதம், நம்பியாண்டார் நம்பி குருபூஜை, குரங்கணி முத்துமாரியம்மன் வருஷாபிஷேக, சிவகாசி விஸ்வநாதர் காலையில் பூச்சப்பரம், இரவில் ரிஷப வாகனம், சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு, சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கமலாசனம்.
* ஜூன் 7, வைகாசி 24: நமிநந்தியடிகள், சேக்கிழார் குருபூஜை, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் ஊஞ்சல் சேவை, சிவகாசி விஸ்வநாதர் புறப்பாடு, திருமயம் சத்தியமூர்த்தி பவனி, திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை எழுந்தருளல், சங்கரன்கோயில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.