உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்கு மடங்கு நல்லவர்

நான்கு மடங்கு நல்லவர்

ஒருமுறை எரிகோ என்னும் நகருக்கு இயேசு சென்றார். அவரைக் காண மக்கள் திரளாக கூடினர். அங்கு ’சகேயு’ என்னும் தீயவன் ஒருவனும் முண்டியடித்து கொண்டு வந்தான். சராசரி உயரம் இல்லாத அவனால் இயேசுவைக் காண முடியவில்லை. அருகிலிருந்த காட்டத்தி மரம் ஒன்றில் உச்சிக்கு செல்ல முயன்றான். அதைக் கவனித்த இயேசு, கீழே இறங்கி தன் அருகில் வருமாறு அழைத்ததோடு, “நான் உன் வீட்டிற்கு வரப் போகிறேன்” என்றும் கூறினார்.  அவர் அப்படி சொல்வதைக் கேட்ட மக்கள் மிகவும்
ஆச்சரியப்பட்டனர். ’பாவச்செயல்களில் மட்டுமே ஈடுபடும் இத்தீயவனது வீட்டுக்கு வருவதாகச் சொல்கிறாரே!’ என்று காதுபட முணுமுணுத்தனர். ஆனால் யாரையும் பொருட்படுத்தாமல் இயேசு புறப்பட்டார். அவரது வீட்டுக்கு சென்றார்.  சகேயு மனம் திருந்தி,  சம்பாதித்த பணத்தில் பாதியை ஏழைகளுக்கு கொடுப்பதாகவும், மற்றவர்களிடம் அநியாயமாக பெற்ற பொருளை நான்கு மடங்கு அதிகமாக திருப்பிக் கொடுப்பதாகவும் தெரிவித்தான்.  அவனைக் கட்டியணைத்தார் இயேசு. தீயவனும் நான்கு மடங்கு அளிக்கும் நல்லவராக மாறுவது அதிசயம் தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !