கிருஷ்ணகிரி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
கிருஷ்ணகிரி: புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா வாணவேடிக்கையுடன் நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கடந்த மே, 28ல், தர்மபுரி மறை மாவட்ட முதன்மை குரு அம்புரோஸ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து, 29 முதல், ஜூன், 1 வரை சிறப்பு நவநாள் திருப்பலிகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் (ஜூன்., 2ல்) காலை, 8:30 மணிக்கு புது நன்மை, உறுதி பூசுதல் வழங்குதல் மற்றும் திருவிழா திருப்பலி ஆகியவை, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் நடந்தது.
மாலை, 6:00 மணிக்கு, காவேரிப்பட்டணம் சாந்திமாதா ஆலய பங்குத்தந்தை தேவசகாயம் தலைமையில், கூட்டுப்பாடற்பலி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, புனிதரின் அலங்கார ஆடம்பர தேர்பவனி வாணவேடிக்கையுடன் நடந்தது. இன்று (ஜூன்., 4ல்) காலை, 11:00 மணிக்கு திருப்பலி, தேர்பவனியும் மாலை, 5:00 மணிக்கு நன்றி பலி மற்றும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.