உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லூர் அருகே காளியம்மன் கோயில் திருவிழா

அலங்காநல்லூர் அருகே காளியம்மன் கோயில் திருவிழா

அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் அருகே சர்க்கரை ஆலை மேட்டுப்பட்டி முத்தாலம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது.

விநாயகருக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா துவங்கியது. இரவு அம்மனுக்கு கரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்தும், ஆடுகள் வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !