உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பத்தில் கோயில் கும்பாபிஷேகம்

கம்பத்தில் கோயில் கும்பாபிஷேகம்

கம்பம்: கம்பம் யாதவர் மடாலயத்தில் அமைந்துள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று (ஜூன்., 6ல்) நடைபெற்றது.

முன்னதாக முதல் நாள் மங்கள இசையுடன், புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் கோயிலை சுற்றி மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து பூமி பூஜை, காப்பு கட்டுதல், வாஸ்து சாந்தி, சாற்று மறை, மகா தீபாராதனையுடன் நிறைவு பெற்றது.

இரண்டாவது நாளில் நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் வேத பாராயணம் நடைபெற்றது.
யாகசாலை அனைத்து குண்டங்களிலும் அக்னிபிரதிஸ்டை செய்தல் நடைபெற்றது. நேற்று (ஜூன்., 6ல்) அதிகாலை திருப்பள்ளி, எழுச்சி, விஸ்வரூப தரிசனம், கோமாதாபூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. காலை 10:00 மணிக்கு யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, மங்கல இசை ஒலிக்க, பக்தர்களின் "கோவிந்தா, கோவிந்தா கோஷத்திற்கிடையே வேணு கோபால கிருஷ்ண சுவாமி மற்றும் அனைத்து கோபுர கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு விநாயகர், மகாலட்சுமி, சக்கரத்தாழ்வார், லட்சுமி, ஹயக்ரீவர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகிய கோயில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை திருச்சி ஸ்ரீரங்கம் எஸ். ரெங்கசாமி பட்டர், குழுவினர் நடத்தினர். அன்னதானம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !