மதுரமங்கலம் எம்பார் கோவில் குளத்திற்கு சுவர் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED :2328 days ago
மதுரமங்கலம்:மதுரமங்கலம் எம்பார் கோவில் குளத்தைச் சுற்றி, மதில் சுவர் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலத்தில், எம்பார் சுவாமி கோவில் உள்ளது.கண்ணில் குறை பாடு உள்ளோர், இந்தக் கோவிலில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கண் சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது,பக்தர்கள் நம்பிக்கை.
இக்கோவில் அருகில் உள்ள, கருட புஷ்கரணி என்ற குளத்தில், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப் படுகின்றன.இதனால், குளத்து நீர் மாசடைகிறது.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்தக் குளம் வறண்டதே இல்லை.தாமரைச் செடிகள் நிறைந்த இந்தக் குளத்து நீர், குடிக்க சுவையாக இருக்கும். குளத்தை சீரமைத்து, மதில் சுவர் கட்டினால், பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.