காஞ்சிபுரம் கங்கையம்மன் திருவிழா நிறைவு
ADDED :2329 days ago
காஞ்சிபுரம்:சின்னக் காஞ்சிபுரம், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த, கங்கையம்மன் திருவிழா நிறைவடைந்தது.
சின்னக் காஞ்சிபுரம், வரதராஜபுரம் தெருவில், வரசக்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம், கங்கையம்மன் திருவிழா, மூன்று நாட்கள் நடைபெறும்.அதன்படி, இந்தாண்டு விழா, 8ம் தேதி, ஜலம் திரட்டுதலுடன் துவங்கியது.இரண்டாம் நாளான, நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு, அலங்கரிக்கப் பட்ட அம்மன் வீதியுலா நடந்தது.பகல், 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது. மூன்றாம் நாளான, நேற்று பகல், 12:00 மணிக்கு, சீர்கஞ்சி வார்த்தலுடன், கங்கையம்மன் திருவிழா நிறைவுபெற்றது.