உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி மாரியம்மன் திருவிழா பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி மாரியம்மன் திருவிழா பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி:கோத்தகிரி குண்டாடா பிரிவு மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.விழாவில், அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்கார வழிபாடு நடந்தது. தொடர்ந்து, கரக ஊர்வலத்தில் அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து இளைஞர்கள் பங்கேற்ற வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். பொது மக்களின் உற்சாகத்திற்கு இடையே, வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், குண்டாடா பிரிவு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !