உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலையில் ஆக்கிரமிப்புகள்: செக்யூரிட்டிகள் ஆதரவு

பழநி மலையில் ஆக்கிரமிப்புகள்: செக்யூரிட்டிகள் ஆதரவு

பழநி:பழநி முருகன் மலைக்கோயில் படிப்பாதை, யானைப்பாதையில் தடையை மீறி, ஆக்கிரமிப்பு கடைகள் செயல்படுகிறது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தைத்தொடர்ந்து, பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தவிர்க்க, பழநி முருகன் மலைக்கோயில் அடிவாரம், ரோப்கார் பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்களை போலீசார் சோதனை செய்து அனுப்புகினறனர். சென்னை பாதுகாப்பு படையினர் கோயில் பாதுகாப்பு குறித்து, மலைக்கு வழிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தி திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் தலைமையில், கோயில் அதிகரிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.

நிலைமை இப்படி இருக்கையில் மலைக்கோயிலின் பாதுகாப்பிற்கு சவால் விடும் அளவிற்கு சில செக்யூரிட்டிகள், போலீசார் ஆதரவில் படிப்பாதை, யானைப்பாதை குறுக்குவழியில் மூட்டை மூட்டையாக பொருட்களை கொண்டுசென்று பக்தர்களுக்கு இடையூறாக தரைக்கடை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.படி, யானைப்பாதையில் கடை வைத்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிப்பு பலகை உள்ளது. ஆனால் நடவடிக்கை பெயரளவில் உள்ளது. போலீசார் பக்தர்களின் பொருட்கள், கைப்பை, உடைமைகளை சோதனை செய்கின்றனர், மூட்டை மூட்டையாக பொருட்களை கொண்டு சென்று வியாபாரம் செய்பவர்களை கண்டு கொள்வதில்லை. மலைக்கோயிலின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு படி, யானைப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கண்காணிப்பு கேமரா பொருத்தி, பாதுகாப்பை பலப்படுத்த திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல், கோயில் இணை ஆணையர் செல்வராஜ் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !