உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ப்பையின் மகிமையும் சிறப்பும்!

தர்ப்பையின் மகிமையும் சிறப்பும்!

சுபநிகழ்ச்சி மற்றும் தர்ப்பணம் போன்ற சடங்குகளுக்கு தர்ப்பை புல்லை பயன்படுத்துகின்றனர். கையிலும், தொடையிலும் வைத்துக் கொண்டும், மோதிரமாக விரலில் அணிந்தும் சடங்குகளைச் செய்கிறோம். விதை இல்லாமல் முளைக்கும் தாவரம் தர்ப்பை. மனிதன் உருவாக ஆண், பெண் சக்தி என்னும் விதை உண்டு. ஆனால் உயிருக்கு விதை கிடையாது.

அது எப்படி உடலுக்குள் வருகிறது, எப்படி செல்கிறது என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். ஆதாரம் இல்லாமல் தோன்றிய தர்ப்பை போல, உயிர்களும் ஆதாரமற்றவை என்பதை வெளிப்படுத்தவே சடங்குகளில்  தர்ப்பையை பயன்படுத்துகிறோம்.

ஆக்சிஜன் என்னும் பிராணவாயுவை வெளியிடும் திறன் தர்ப்பைக்கு உண்டு. அமாவாசை தர்ப்பணம் செய்யும் நதிக்கரைகளிலும், சுபநிகழ்ச்சியின் போதும் கூட்டம் அதிகமிருக்கும். அவர்கள் விடும் மூச்சால் காற்றில் கார்பன்டை ஆக்ஸைடு அதிகரிக்கும். அதை ஈடுகட்டும் விதமாக ஆக்சிஜனை வெளியிடும் தர்ப்பையை பயன்படுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !