இது ராஜா மரியாதை!
ADDED :2339 days ago
ராமநாதபுரம் மன்னர் பாஸ்கரசேதுபதி மேலைநாட்டுக்கு சென்ற விவேகானந்தரை, நான்காண்டுகளாக எதிர் பார்த்துக் காத்திருந்தார். 1897 ஜனவரி 26 ல் யாத்திரை முடித்து தாயகம் திரும்பிய விவேகானந்தரை, ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் செல்ல சாரட்டுடன் வந்தார். அதில் கட்டப்பட்டிருந்த குதிரைகளை அவிழ்த்து விடுமாறு சேதுபதி மன்னர் உத்தரவிட்டார். பின் மன்னரும், அதிகாரிகளும் கைகளாலேயே சாரட்டை இழுத்தபடி அரண்மனைக்கு வந்தனர். தன்மீது சேதுபதி மன்னர் கொண்ட மதிப்பைக் கண்ட விவேகானந்தர் மனம் நெகிழ்ந்து போனார்.