இதுவே சிறந்த பண்பு
ADDED :2335 days ago
இறைவன் தனது பிரதிநிதியாக மனிதனைப் படைத்திருக்கிறான். அவன், இறைவனின் கட்டளைக்கு பணிந்து நடந்தால், தனக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்தை ஒழுங்காகப் பயன்படுத்துகிறான் என்று அர்த்தம். அதேநேரம், மனிதனுக்கு பல சோதனைகளும் வருகின்றன. அதைத் தாங்க முடியாமல், அவன் தவறுகளும் செய்கிறான். அவ்வாறு தவறு செய்பவன் பாவமன்னிப்பு கேட்கிறான். பாவமன்னிப்பு கேட்பது என்பது இறை நம்பிக்கை யாளனின் சிறந்த பண்புகளில் ஒன்று. இந்த பண்பைக்கொண்டு மனிதன் தன்னை பரிசுத்தப் படுத்திக் கொள்கிறான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், துஆ ஒன்றை சொல்லியுள்ளார்கள். அதைக் கேளுங்கள். “அல்லாஹ்வே! என்னை பாவமீட்சி கோருவோரில் ஆக்கு. மேலும், என்னைப் பரிசுத்தமானவர்களில் ஆக்கு!” என்பதே அந்த துஆ. இந்த துஆவைச் செய்வதன்மூலம் நாம் துõய்மை யானவர்களாக மாறுவோம்.