உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுண்டம்பாளையத்தில் கும்பாபிஷேக விழா

கவுண்டம்பாளையத்தில் கும்பாபிஷேக விழா

அன்னுார்: அன்னுார், சிறுமுகை ரோடு, கவுண்டம்பாளையத்தில், மாகாளியம்மன், செல்வ விநாயகர், நாகசக்தி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் துவங்கியது. புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மாலையில் விநாயகர் வழிபாடு, யாகசாலை பிரவேசம், எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி நடந்தது. காலை 9:45 மணிக்கு மாகாளியம்மன், செல்வ விநாயகர், நாகசக்தி ஆண்டவர் விமானத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !