அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :2661 days ago
அலங்காநல்லூர் : அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் உள்ள வித்தக விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய அருகம்புல், மல்லிகை, ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு மாலைகளை விநாயகருக்கு அணிவித்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மேலும் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை ஆதிவேல் சன்னதியில் விசேஷ பூஜை நடந்தது.