அன்னூர் நாகசக்தி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2376 days ago
அன்னூர்: அன்னூர், சிறுமுகை ரோடு, கவுண்டம்பாளையத்தில், மாகாளியம்மன், செல்வ விநாயகர், நாகசக்தி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல திருப்பணிகள் செய்யப் பட்டுள்ளன.கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் (ஜூன்., 20ல்)துவங்கியது.
புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மாலையில் விநாயகர் வழிபாடு, யாகசாலை பிரவேசம், எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று (ஜூன்., 21ல்)அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி நடந்தது. காலை 9:45 மணிக்கு மாகாளியம்மன், செல்வ விநாயகர், நாகசக்தி ஆண்டவர் விமானத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.