மதுரையில் உலக சித்தர்கள் மாநாடு
ADDED :2321 days ago
மதுரை: உலக சித்தர்கள் ஞானபீடம் நடத்தும் உலக சித்தர்கள் மாநாடு, 22ம்தேதி சனி மற்றும் 23 ஞாயிறு இரண்டு நாட்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. இதில் 100008 ருத்ராட்சம் மூலம் உருவாக்கப்பட்ட 18 அடி உயர சிவலிங்கம் தரிசனம், 1008 திருவிளக்கு பூஜை, சித்தர்கள் முறைப்படி 108 யாக வேள்வி, 108 சங்குநாதம், கைலாய வாத்தியம், நமது பாரம்பரிய நாட்டுப்புற இசை போன்றவை நடைபெற உள்ளன. இதேபோல பட்டிமன்றம், பரதநாட்டியம், யோகா, சிலம்பம், நீலகிரி படுகர் நடனம், மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு அனுமதி இலவசம். 2 நாட்களும அன்னதானம் நடைபெறுகிறது.