உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கோவிலில் தரமான பிரசாதம்

திருச்செந்துார் கோவிலில் தரமான பிரசாதம்

துாத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், குறைந்த விலையில், தரமான பிரசாதங்கள் வழங்க, நேரடி விற்பனையில், நிர்வாகம் இறங்கியுள்ளது. தமிழகத்தில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில், முதுநிலை கோவில்களில் தயாரித்து, விற்பனை செய்யப்படும் பிரசாதங்கள், தரமற்று இருப்பதாக, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., கவனத்திற்கு, புகார்கள் சென்றன.இதையடுத்து திருச்செந்துார், திருவண்ணாமலை, திருத்தணி, சமயபுரம், மதுரை, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கோவில்களில், 1ம் தேதி முதல், நிர்வாகமே, பிரசாதங்களை தயாரித்து, விற்பனை செய்ய, முதல்வர் உத்தரவிட்டார்.

இதில், ஆகம விதிப்படி, கோவில் உள்ளே, பிரசாதம் தயாரிப்பதில், சில பிரச்னைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளதால், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மட்டும், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று முதல், நிர்வாகமே, நேரடியாக, பிரசாத விற்பனையை துவங்கியது. தற்கட்டமாக லட்டு, தேன்குழல் முறுக்கு, அதிரசம், மிளகுவடை, சர்க்கரை பொங்கல், புளியோதரை என, ஆறு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டன. அடுத்த கட்டமாக புட்டமது, பஞ்சாமிதர்தம் உள்ளிட்டவை, விற்பனை செய்யப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !