நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் விமரிசை
நரசிங்கபுரம்:நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆனி பிரம்மோற் சவத்தை முன்னிட்டு, நேற்று (ஜூலை 1ல்) தேரோட்டம் நடந்தது.
பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரத்தில் உள்ளது மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம் மர் கோவில். இந்த கோவிலில், இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம், கடந்த, 25ம் தேதி, கொடியே ற்றத்துடன் துவங்கியது.விழாவின் மூன்றாம் நாளான, கருடசேவை, 27ம் தேதி, காலை, 6:00 மணிக்கு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, 7ம் நாள் திருவிழாவான தேரோட்டம், நேற்று, காலை, 7:00 மணிக்கு நடந்தது.
முன்னதாக, காலை, 6:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் லட்சுமி நரசிம்மர் தேரில் எழுந்தருளினர். தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.வரும், 4ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு, கொடியிறக்கமும், மறுநாள், 5ம் தேதி, காலை, 9:00 மணிக்கு விடையாற்றி திருமஞ் சனமும், இரவு, 7:00 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறும்.