உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையத்தில் அந்தோணியார் தேர்த்திருவிழா

மேட்டுப்பாளையத்தில் அந்தோணியார் தேர்த்திருவிழா

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் புனித அந்தோணியார் தேர்த்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேர்த் திருவிழா கடந்த மாதம், 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஒவ்வொரு நாளும் மாலையில், திருப்பலி, வேண்டுதல் தேர்பவனியில் நவநாள் ஜெபம், அருளுரை, நற்கருணை ஆசீர் ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகளை, பாதிரியார்கள் நடத்தினர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு காலையில்,கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் பங் கேற்று, சிறுவர், சிறுமிகளுக்கு முதல் நற்கருணையும், உறுதிபூசுதலும் வழங்கி, திருப்பலியை நிறைவேற்றினார்.

மாலையில் பங்கு பாதிரியார் ரொசாரியொ தலைமையில், ஜேக்கப், குருசாமி, விக்டர், மரிய சூசை ஆரோக்கியநாதன், தேவராஜ், அந்தோணி முத்து, எட்வேர்டு ஆகிய பாதிரியார்கள், தேர்த்திருவிழா திருப்பலியை நிறைவேற்றினர்.பின்பு அலங்காரம் செய்த புனித அந்தோணி யார் தேரோட்ட நிகழ்ச்சி துவங்கியது. முதலில் மைக்கல் சமனஸ் தேரும், பின்பு வேளாங் கண்ணி மாதா தேரும், அதன் பின்பு அந்தோணியார் தேரும் சென்றது. சர்ச்சிலிருந்து புறப்பட்ட தேர்பவனி, ஊட்டி மெயின் சாலை, செந்தில் தியேட்டர் சாலை, நியூ எக்ஸ்டன்சன் வீதி, அண்ணாஜி சாலை, பஸ் ஸ்டாண்ட் வழியாக சர்ச்சை அடைந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இறுதியில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார், பங்கு பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !