உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நஞ்சுண்டேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம்

நஞ்சுண்டேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், பெள்ளாதி சின்னதொட்டிபாளையத்தில் உள்ள அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நான்காம் ஆண்டு திருக்கல்யாண வைபவ உற்சவ விழா கடந்த, 28ம் தேதி கிராமசாந்தியுடன் துவங்கியது.29ம் தேதி விநாயகர் வழிபாடுடன் கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், 108 மூலிகை ஹோமத்துடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின.

30ம் தேதி, 1008 குங்கும அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனையும், 1 ம் தேதி அஸ்வமேத யாகமும் நடந்தன. நேற்று திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, காலை சின்னதொட்டிபாளையம் செல்வ விநாயகர் கோவில், சேரன் நகர் சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, ஊர்பொது மக்கள் சார்பாக சீர்வரிசைகளோடு ஊர்வலமாக பக்தர்கள் கோவிலுக்கு வருகைபுரிந்தனர். கோவிலில் அமிர்தவர்ஷினிக்கும், நஞ்சுண்டேஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி துவங்கியது. நஞ்சுண்டேஸ்வரர் கரங்களில் இருந்து திருமாங்கல்யத்தை அர்ச்சகர்கள், அமிர்தவர்ஷினி அம்பாளுக்கு அணிவித்தனர். அதன் பின் சுவாமிக்கு மூன்று முறை மாலை மாற்றும் வைபவம் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற திரளான பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன. யாக பூஜைகளை, சிவகிரி மாரியம்மன் கோவில் பரம்பரை ஸ்தானிகம் கண்ணன் பட்டர் தலைமையில் அர்ச்சர்கள் குழுவினர் செய்திருந்தனர். விழாவில், கிருபானந்த வாரியார் சீடர் தண்டபாணி அய்யர், மீனாட்சி திருக்கல்யாணம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் நஞ்சப்பன் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !