காஞ்சி அத்திவரதர் வைபவம் 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED :2314 days ago
காஞ்சிபுரம், அத்திவரதர் வைபவத்திற்கு, மூன்று சிறப்பு ரயில்களை, ரயில்வே நிர்வாகம் இயக்கியது.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், அத்திவரதர் வைபவம், 1ம் தேதி, துவங்கியது. அத்தி வரதர் வைபவத்திற்காக, தமிழ்நாடு மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங் களில் இருந்து, தரிசனத்திற்காக, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இதனால், ரயில்வே நிர்வாகம், பக்தர்கள் எளிதாக செல்வதற்காக, தாம்பரம் - காஞ்சிபுரம், செங்கல்பட்டு - காஞ்சிபுரம், செங்கல்பட்டு - அரக்கோணம் ஆகிய மூன்று சிறப்பு ரயில்கள், 1ம் தேதியிலிருந்து, இயக்கி வருகின்றன.இதை, பக்தர்கள் பயன்படுத்தி, ரயிலில் செல்லலாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சேவை, கடந்த, 1ம் தேதியிலிருந்து, ஆகஸ்ட் மாதம், 17ம் தேதி வரை இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம்அறிவித்துள்ளது.