உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் மழை வேண்டி யாகவேள்வி

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் மழை வேண்டி யாகவேள்வி

சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் மழை வேண்டி யாக வேள்வி பூஜை நடந்தது.சங்கராபுரம் பகுதியில் கடந்த இரண்டாண்டாக பருவ மழை பொய்த்ததால் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் வற்றியது.கடும் வறட்சியால், கிணறுகள், போர்களில் நீர் மட்டம் குறைந்தது. இதனால் சங்கராபுரம் வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் மழை வேண்டி யாக வேள்வி பூஜை நடத்த தேவபாண்டலம் கிராம மக்கள் முடிவு செய்து நேற்று (ஜூலை 3ல்.,) தேவபாண்டலம் ஏரியில் பாண்டலம் பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம் தலைமையில் ரவி குருக்கள் முன்னிலையில் யாக வேள்வி பூஜை நடந்தது.பிரதோஷ வழிபாட்டு மன்றத்தினர், ஊர் பொது மக்கள் யாக வேள்வி பூஜையில் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !