உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் முதுகுளத்தூர் நீதிமன்ற நீதிபதி ராமசங்கரன், டி.எஸ்.பி. ராஜேஸ் தலைமையிலும் இன்ஸ்பெக்டர் கலைஅரசன்,செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

ஜூலை 3ம் தேதி காலை 9.00 மணிக்கு மஹாகணபதி ஹோமம் தொடங்கி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ரக்சா பந்தனம், கடல்தானம், முதல் கால யாக பூஜை நடந்தது.நேற்று (ஜூலை 4ல்.,) காலை 06.00 மணிக்கு க்ருஷ்ண சுப்ரப்தம், விக்னேஸ்வர் பூஜை, நவக்கிரஹ ஹோமம், லெட்சுமி நாடி சந்தனம்,பூர்ணஹூதி,இரண்டாம் கால பூஜை தீபாரா தனை நடந்தது. பின்பு காலை 9.00 மணிக்கு கோமாதா பூஜை நடத்தபட்டு கருட வாகன புறப் பாட்டுக்கு பின் கலசத்தில் கும்ப நீர் ஊற்றப்பட்டது.விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபராதனைகள் நடந்தது.பின்னர் பொது அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை போலீஸ் குடியிருப்பவர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !