உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

ஊத்துக்கோட்டை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

ஊத்துக்கோட்டை:மாகரல்கண்டிகை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன்  கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை  வழிபட்டனர்.

எல்லாபுரம் ஒன்றியம், மாகரல்கண்டிகை கிராமத்தில் உள்ளது, திரவுபதி அம்மன்  கோவில். ஒவ்வொரு ஆண்டும், ஆனி மாதம், தீமிதி திருவிழா நடைபெறுவது  வழக்கம்.

இந்தாண்டு, 28ம் தேதி, கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி  நடந்தது. பின், ஒவ்வொரு நாளும், சூரன் வதம், திரவுபதி, அர்ஜுனன்  திருக்கல்யாணம், நச்சுக்குழி யாகம் ஆகிய நிகழ்ச்சிகள் மற்றும் நேற்று (ஜூலை., 8ல்) இரவு உற்சவர் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பின், தர்மராஜா வீதியுலா, அர்ஜுனன் தபசு, மாடுபிடி சண்டை, படுகளம், 18ம் நாள் போர்க்களம் ஆகியவையும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான, நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்) இரவு, 7:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது.இதில், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !