வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் குரு பூஜை
ADDED :2321 days ago
வாடிப்பட்டி:வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் மாணிக்க வாசகர் குரு பூஜை நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகளை கோயில் நிறுவனர் கோபிநாத் செய்தார். திருவாசக பாடல்கள் படிக்கப்பட்டன. மாணிக்கவாசகர் பேரவையினர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.