உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னீர்மடையில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு கும்பாபிஷேகம்

பன்னீர்மடையில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்:பன்னீர்மடையில் உள்ள சீனிவாச பெருமாள், ரங்கநாயகி  அம்மன் திருக் கோவில் கும்பாபிஷேகம் இம்மாதம்,6ம் தேதி வாஸ்து பூஜையுடன்  துவங்கியது.தொடர்ந்து, 7ம் தேதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்,  யாகசாலையில் பெருமாள் எழுந்தருளல், திருவாராதனம் சாற்றுமுறை, விமான  கலசம் ஸ்தாபனம், மூலவர் பிரதிஷ்டை செய்தல், வேதபாராயணம் ஆகிய  நிகழ்ச்சிகள் நடந்தன. மறுநாள் காலை, 9.00 மணிக்கு மகா கும்பாபிஷே கம்  நடந்தது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடந்தது. இதில்,  திரளான பக்தர்கள் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !